மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்பி அஞ்சலி
சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை (25) காலமானார். இந்நிலையில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் பலரும் இரங்கல்
மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழகத்துக்குச் சென்று, நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
