குளத்தூரில் மண் கவ்விய ஸ்டாலின்; பெரம்பூரில் விஜய் சாதனை
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கிது. அதில், 116 தொகுதிகளில் வெளியான முடிவில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
தற்போதுள்ள நிலவரப்படி தவெக 50 தொகுதிகளிலும், திமுக 31 தொகுதிகளிலும், அதிமுக 34 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது.

திமுகவினருக்கு அதிர்ச்சி
இதில், திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் 800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதேநேரம், தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் இருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே தபால் வாக்குகளை திமுக மட்டுமே முதலிடத்தில் இருந்தது.
ஆனால் இந்த முறை தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. திமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது. விஜயின் மிகப்பெரிய வெற்றியாக இதை பார்க்கலாம். அதேநேரம், 234 தொகுதிகளுக்குமான தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே முழு விபரம் தெரியவரும்