பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்!

SriLankan Airlines Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka
By Shankar Dec 20, 2023 03:23 PM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாரிஸில் உள்ள விமான நிலையத்திற்கு பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளது.

பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்! | Srilankan Airlines Is Facing A Massive Crisis

இவ்வாறான நிலைல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சொந்தமான  UL 563 எனும் A 330 வகை விமானம் தொடர்ந்தும் Charles de Gaulle சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த முக்கிய அறிவிப்பு

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த முக்கிய அறிவிப்பு

இதேவேளை, குறித்த விமானம் இலங்கைக்கு இன்று (20) திரும்புவதற்கு திட்டமிடப்படிருந்ததாக அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறினால் பிரான்ஸில் நேற்று முன்தினம் தரையிறங்கிய விமானத்துடன், தற்போது இயக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இலங்கை விமானங்களின் எண்ணிக்கை 9 ஆகும். இவற்றில் 5 விமானங்கள் தேவையான கருவிகள் இல்லாமையால் இதுவரை சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்! | Srilankan Airlines Is Facing A Massive Crisis

தற்போது இரு விமானங்களின் பராமரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதாக விமான சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று கும்ப ராசிக்குள் நுழைந்த சனி பகவான்; நற்பலன் பெறவுள்ள ராசிகள் யார்

இன்று கும்ப ராசிக்குள் நுழைந்த சனி பகவான்; நற்பலன் பெறவுள்ள ராசிகள் யார்

இவற்றுக்கு ஊழியர்களின் பற்றாக்குறை பாரிய தடையாக இருப்பதாக, விமானப் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பராமரிப்பு பணிகளையேனும் ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்! | Srilankan Airlines Is Facing A Massive Crisis

2022 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 138 அனுபவம் வாய்ந்த விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த சேவைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவரை தெரியுமா? பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

இவரை தெரியுமா? பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

இவர்களில் பெரும்பாலானோர் இராஜினாமா செய்துள்ளதுடன், சிலர் பதவி உயர்வு பெற்றும் சிலர் ஓய்வு பெற்றும் சென்றனர்.

விமான சேவை சந்தையில் தற்போதைய தேவையினால், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இராஜினாமா செய்த பெரும்பாலானோர் ஏனைய விமான நிறுவனங்களில் சேவையில் இணைந்து கொண்டுள்ளனர்.

பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்! | Srilankan Airlines Is Facing A Massive Crisis

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 475 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றபோதிலும், தற்போது 380 விமான தொழில்நுட்ப வல்லுநர்களே உள்ளனர்.

அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் எண்ணிக்கை 280 ஆகும்.

இதனிடையே, 160 பேரில் 40 பேர் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமம் பெற்ற விமானப் பொறியியலாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US