நாட்டை முடக்கியதால் ரயில் திணைக்களத்துக்கு நட்டம் – தம்மிக்க ஜயசுந்தர
நாட்டை முடக்கியதால் ரயில் திணைக்களத்துக்கு பாரிய நாட்டம் ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
“கொரோனா வைரஸ் பரவலால் 10 நாள்களுக்கு நாட்டை முடக்குவதன் மூலம் ரயில்வே திணைக்களத்துக்கு 13 கோடி 33 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படும்.” இவ்வாறு ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டை முடக்குவதால் ரயில்வே திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுகின்றது. மாதமொன்றுக்கு 40 கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது. ரயில்வே திணைக்களத்துக்கு மாதமொன்றுக்கு 50 கோடி ரூபா வருமானம் கிடைக்கின்றது.
ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததன் பின்னர் அந்த வருமானத்தில் 10 கோடி ரூபா குறைவடைந்துள்ளது” என்றார்.