இலங்கை வானூர்திப்படையின் நீரில் உயிர்வாழும் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
இலங்கை வானூர்திப்படை வானூர்திப் பணியாளர்களுக்கான இரண்டாவது 'நீரில் உயிர்வாழும் பயிற்சி நெறி' (Water Survival Training Course), திருகோணமலையிலுள்ள விசேட படகுக் கணியப் பயிற்சிப் பாடசாலையில் (Special Craft Squadron Training School) கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகி, 5 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அவசரகாலப் பயிற்சி
இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, விசேட படகுக் கணியப் பயிற்சிப் பாடசாலையின் பயிற்சி நிறைவேற்று அதிகாரி திஸ்ஸ குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடல்சார் சூழல்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தேவையான நீரில் உயிர்வாழும் திறன்கள் மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி நெறியில், இலங்கை வானூர்திப்படையின் 5 அதிகாரிகள் மற்றும் 15 ஏனைய நிலைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நீச்சல், மிதக்கும் நுட்பங்கள், நீருக்கடியில் தப்பிக்கும் நுட்பங்கள், கடலில் உயிர்வாழ்தல், முதலுதவி மற்றும் மீட்பு நுட்பங்கள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளைக் கொண்ட இந்தப் பயிற்சி நெறியின் இறுதிப் பயிற்சி, திருகோணமலைத் துறைமுகப் பகுதித் தீவுச் சூழலில் 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
மேலும், இந்தப் பயிற்சித் திட்டம் இலங்கை கடற்படைக்கும் இலங்கை வானூர்திப்படைக்கும் இடையிலான படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பையும் கூட்டு செயல்பாட்டுத் திறன்களையும் மேலும் வலுப்படுத்துவதற்குச் சிறப்புப் பங்களிப்பை வழங்கும்.


