ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற இலங்கையர்கள் படும் துயரம்!
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர்கள் விசா பெற இந்தியாவுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த நிலை போலந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட 15 நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்நாடுகளின் தூதரகங்கள் இலங்கையில் ஏற்படுத்தப்படாததால், அந்நாடுகளுக்கு வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் விசாவில் கையெழுத்திட இந்தியாவுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், அவர்களுக்கு மேலதிகமாக 3 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
மேலும், விசா தாமதமானால், பணி அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்படலாம் என்றும், அப்படியானால் விண்ணப்பதாரர் பெருமளவு பணத்தை இழக்க நேரிடும் என்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
2016ஆம் ஆண்டு முதல் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக இருந்த போதும் இது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் தற்போதைய வெளிவிவகார அமைச்சராலும் கூட இந்த பிரச்சினைக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த தகவலால் திகைப்பு!
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையின் ஊடாக 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.