பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்; நாட்டுக்கு தப்பியோட்டம்!
பிரான்ஸ் தலைநகர் பரீஸ் பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் 8 லட்சம் யூரோக்களுடன் 47 வயதான குடும்பஸ்தர் இலங்கைக்கு தப்பி ஓடிவந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் பிரான்சின் பல பகுதிகளிலும் வீடுகள், காணிகளை தமிழர்களுக்கு வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார். அத்துடன் தமிழர்களிடையே சீட்டு பிடிக்கும் முதலாளியாகவும் அவர் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பணத்துடன் தலைமறைவு
இந் நிலையில் கிட்டத்தட்ட என்பதுக்கும் அதிகமான தமிழர்களின் சீட்டுப் பணத்துடன் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது அவர் முல்லைத்தீவுப்பகுதியில் நடமாடிவருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளார்களாம்.
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த தகவலால் திகைப்பு!
அதேவேளை குறித்த மோசடியாளர் திருமணமானவர் என்பதுடன் மனைவி பிள்ளைகளுடன் பிரான்சில் வசித்து வந்த நிலையில் தற்போது தாயகம் வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிரான்சில் உள்ள மனைவியிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள் கேட்டபோது, கணவனும் தானும் பிரிந்து பல நாட்கள் ஆகின்றதாக தெரிவித்த மனைவி விரைவில் கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் கூறினாராம்.
இந்நிலையில் தாம் சிறுக சிறு சேர்த்த பணத்தை பறிகொடுத்த தமி மக்கள் பெரும் துயரத்தில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.