சுவிஸில் மனைவியை கொன்றதாக இலங்கை தமிழர் மீது கொலைக் குற்றச்சாட்டு
சுவிஸ்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலையில், மனைவியைக் கொலை செய்த புலம்பெயர் இலங்கை தமிழர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி இடம்பெற்றது, சம்பவம் இடம்பெற்றபோது பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்த நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவர்
இலங்கையைச் சேர்ந்தவர்களான 59 வயதான கணவனும் 47 வயதான மனைவியும், ஒன்றாக அந்த சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றி வந்தனர்.
அன்றுகாலை அவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், 47 வயதுடையை மனைவியை, கணவன் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
விசாரணையின் போது, வாக்குவாதத்தின் போது தனது மனைவியைக் குத்தியதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தை அடுத்து கணவன் கைது செய்யப்பட்ட இலங்கையர் குற்றம் நடந்ததிலிருந்து தற்போது வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை தமிழர் குற்றத்தை ஏற்றுகொண்டதை அடுத்து அவருக்கு சிறை தண்டனை வழங்க வேண்டுமென சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.