கட்சிக்குள் ஒருமித்தம் இல்லையா? சாணக்கியன் நியமனத்தில் எழுந்த சர்ச்சை
நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் அறிவித்துள்ளார்.
எனினும், இந்த நியமனம் தொடர்பில் கட்சியின் மற்றொரு முக்கிய உறுப்பினரான சீ.வி.கே. சிவஞானம் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆரம்ப கட்டமாக மட்டுமே ஒரு உரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், இன்னும் குறித்த நியமனம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே கட்சியின் இரு முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடையே இவ்வாறு முரணான கருத்துக்கள் வெளிப்படுவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், கட்சிக்குள் இத்தகைய கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில், மக்கள் தொடர்பான விடயங்களில் அவர்கள் எவ்வாறு ஒருமித்த முடிவுகளை எடுப்பார்கள் என்ற கேள்வியும் விமர்சனமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்....