சுவிட்சர்லாந்தில் யாழ் பெண்ணின் 25 வருட வாழ்க்கையை ஒருநொடியில் சிதைத்த கணவர்!
சுவிற்சர்லாந்தில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இலங்கைபெண் தொடர்பில் மேலதிக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் கூறப்படுகின்றது. கடந்த 25 வருடங்களாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன் சுவிற்சர்லாந்தில் வசித்து வருகின்றார்.
கணவன், மனைவிக்கிடையில் முரண்பாடு
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட முரண்பாடு இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது.
ஆர்கெவ் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்விஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை பெர்னர்ஸ் எஸ்வெர்க் என்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் பெண், பரபரப்பான காலையில் கொல்லப்பட்டார்.
சிற்றுண்டிச்சாலைக்குள் கத்தியுடன் நுழைந்த கணவர் மனைவியை சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே மனையி உயிரிழந்தார். பொலிசார் அங்கு சென்றபோது , சந்தேகநபரான கணவர் எதிர்ப்பின்றி சரணடைந்த்தாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.