இணையத்தை கலக்கும் இலங்கை குயில் யோஹானி; பலரும் அறியாத தகவல்!
இலங்கையை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் பாடகி யோஹானி. அவரின் முழுப்பெயர் யோஹானி டிலோக டீ சில்வா. அவரை அனைவரும் யோஹானி எனவே அழைப்பர். இவர் ஜூலை மாதம் 30ம் திகதி 1993 ல் பிறந்தவர்.
இவர் தற்போழுது கொழும்பிலே வசித்துவரும் இவர் பல துறைகளில் சிறப்பாக தன்னை நிரூபித்துள்ளார். பாடகி, பாடலாசிரியர், ராப்பர், இசைத்தயாரிப்பாளர் மற்றும் சிறந்த பெண் தொழிலதிபர் என பல பரிமாணங்கள் எடுத்துள்ளார்.
அத்துடன் யோஹானி ஒரு யூடியூபர் என்பதும் இவரிடம் இவ்வளவு திறமைகள் உள்ளது என்பதும் வெளிவந்து அவர் நாடு கடந்து புகழ் பெற காரணமாக இருந்தது "மேனிக்கே மஹே ஹிதே " எனும் பாடலின் மூலமே.
இவர் தனது ஆரம்ப கல்வியை 2009 வரை கொழும்பு விசாகா பாடசாலையிலும்2010 தொடக்கம் 2012 வரை உயர் படிப்பை லண்டனிலும் படித்தார்.
யோஹானி 2015ல் General Sir John Kotelawala Defence University ல் இரண்டாம் வகுப்பு மேல் நிலையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்.
(Bachelor of science in logistics ) இவரது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா, தாய் டினிதி டீ சில்வா மற்றும் சகோதரி ஷவின்றி டீ சில்வா. இவரது விடாமுயற்சியால் இன்று நாடு தாண்டி பல இடங்களிலும் யோஹானியின் பாடல் அசைக்க முடியாத தனி இடம் பிடித்துள்ளது.