46 வயதான இலங்கையின் பிரபலம் காலமானார்; சோகத்தில் பலர்
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.
அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்
நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்.
ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.