கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் ; இந்திய விமானத்தில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்
சென்னையிலிருந்து கோவா செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் இருந்த காகிதத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து கோவா செல்லவிருந்த இண்டிகோ விமான (6E 588) புறப்படுவதற்கு சற்று முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, 176 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் வானூர்தியில் தீவிர மோப்ப நாய் சோதனை மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டனர்.
சோதனையின் இறுதியில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சுமார் 5 மணி நேரம் தாமதமாக இரவு 10.15 மணிக்கு வானூர்தி புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.