உனக்கு 15 எனக்கு 17; தமிழ்நாட்டு பொலிசில் இலங்கை காதல் ஜோடி தஞ்சம்!
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்துவந்த பதின்மவயது ஆணும் பெண்ணும் திருமணம் செய்தொண்டதாக கூறி பொலிஸில் தஞ்சமடைந்த நிலையில், சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுவன் ஒருவர் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
க்யூ பிரிவு பொலிஸார் விசாரணை
இலங்கை போரின் போது உயிர்பிழைப்பதற்காக தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கையர்கள் ஏராளம் உள்ளனர். அந்தவகையில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் பகுதியில் இலங்கை வாழ் தமிழர்கள் அகதிகள் முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
குறித்த முகாமில் உள்ள 15 வயதான சிறுமி ஒருவரை ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள 17 வயதான சிறுவன் ஒருவன் காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், முகாமில் இருந்த சிறுவனை காணவில்லை என க்யூ பிரிவு பொலிஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில், மண்டபம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதேசமயம் 17 வயது சிறுவனும், அந்த சிறுமியும் தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறி தஞ்சம் அடைந்துள்ளனர் இதனால் அதிர்ச்சடைந்த போலீஸார், இருவரது பெற்றோர்களையும் வரவழைத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.