ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்
இந்தியாவில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர் தடுக்கி வீழ்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்கள் சில சமயம் அவர்களின் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேம்பாலத்தின் மேலே கொன்க்ரீட் பலகை மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து 22 வயதுடைய குறித்த இளைஞரின் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.