அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்த இலங்கை முக்கியஸ்தர்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மின்வெட்டு எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் காலிமுகத்திடலிலும் ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் முன்று வாரங்களை கடந்தும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை, காலிமுகத்திடல் மக்களின் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்த நிலையில் இலங்கையின் முன்னணி பெண்ணிய அறிஞரும், பிராந்திய மற்றும் உலகளாவிய அடையாளமான கலாநிதி குமாரி ஜெயவர்த்தன ‘ஜனநாயக இலங்கையில் விரைவில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு’ அழைப்பு விடுத்து காலி முகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.