சிறுவர்களின் போலியான புகைப்படங்களை வைத்து பண மோசடி ; அவதானம் மக்களே!
மஹரகம, அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் போலியான புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்மார்ட் தொலைபேசிகளும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டன.
கடவத்த, ஜா-எல மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர்களின் பெற்றோர் அளித்த முறைப்பாடுகளை தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது, பல்வேறு இடங்களில் சிறுவர்களின் புகைப்படங்களைப் பெற்று, நிதி உதவி கோரி முறையிடும் தலைப்புகளுடன், குறித்த மூவரும் பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.