விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்
சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியுடைய "குஷ்" வந்த இலங்கை விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வியாழக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

பொதி செய்யப்பட்ட "குஷ்"
சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-319 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரது பயணப்பையிலிருந்து குஷ் போதைப்பொருளுக்கு நிகரான போதைப்பொருள் 1 கிலோ 10 கிராம் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு ஆபத்தான மருந்துகள் வாரியத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தபடவுள்ளார்.