இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற கனடா வாழ் இலங்கையர் கைது!

Sri Lankan Peoples India Canada
By Sulokshi Oct 15, 2026 06:32 AM GMT
Report

  கனடா குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரை, நாகப்பட்டினம் கோடியக்கரையில் கியூ பிரிவு பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரணை செய்துவருவதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

பைபர் படகு (Fibre boat) மற்றும் படகு மோட்டார் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே அவரிடம் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற கனடா வாழ் இலங்கையர் கைது! | Sri Lankan Canadian Citizenship Arrested India

கைது செய்த கியூ பிரிவு அதிகாரிகள்

ஏ. போல் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், திங்கட்கிழமை மாலை முதல் கோடியக்கரையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவரைச் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்த கியூ பிரிவு அதிகாரிகள், விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சந்தேகநபர் செப்டம்பர் 23 ஆம் திகதி அன்று கனடாவில் இருந்து, கட்டார் வழியாக செப்டம்பர் 25 ஆம் திகதி அன்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சவுதியில் மீண்டும் விசாரணைக்கு வரும் அனோஜன் வழக்கு

சவுதியில் மீண்டும் விசாரணைக்கு வரும் அனோஜன் வழக்கு

சென்னையில் ஒரு நாள் தங்கியிருந்த அவர், செப்டம்பர் 27 ஆம் திகதி அன்று வேதாரண்யத்திற்குப் பயணம் செய்து, அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

பின்னர் கோடியக்கரையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு மாறியுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இவர், 1.29 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பில் படகு இயந்திரத்தையும், 50,000 ரூபாய் மதிப்பில் பைபர் படகு ஒன்றையும் கொள்முதல் செய்துள்ளார்.

ஷிரந்தியின் உடல்நிலையை சோதிக்க 14 மருத்துவர்கள் ; இன்று சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை

ஷிரந்தியின் உடல்நிலையை சோதிக்க 14 மருத்துவர்கள் ; இன்று சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை

அந்தப் படகு, இயந்திரம் மற்றும் ஏனைய பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள பொலிஸார், இவற்றை கொள்வனவு செய்ததன் நோக்கத்தைக் கண்டறிவதற்காக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US