ஷிரந்தியின் உடல்நிலையை சோதிக்க 14 மருத்துவர்கள் ; இன்று சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை
நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று மாலை 4 மணிக்கு மருத்துவமனை பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக 14 மருத்துவர்களை உள்ளடக்கிய விசேட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவானது அவரது இருதய நோய் நிலை மற்றும் அவற்றுக்குத் தேவையான மேலதிக சிகிச்சை நிலை குறித்து பரிந்துரைகளை வழங்கவுள்ளது.
இதேவேளை, ரூ. 10 மில்லியன் மதிப்பிலான அரசாங்க நிதியைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கானது, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.