இலங்கை மீண்டும் பெரும் ஆபத்திற்குள் சென்றுவிடுமோ? அச்சத்தில் மக்கள்
மிக மோசமான யுத்த அனுபவங்களை பெற்ற இலங்கையில் அதிலிருந்து மீண்டுசெல்வதற்கு பதிலாக அதனை விட மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடுகளே அதிகம் இடம்பெற்று வருகிறது.
இன, மத நல்லிணங்கங்களுக்கு மாறாக சமூகங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் விரோதங்களே கட்டியெழுப்பபடுகிறது.
பல்லினம், பல் மதங்கள், சமூகங்கள் வாழ்கின்ற நாட்டில் பன்மைத்துவமும், சமத்துவமும் கட்டியெழுப்படவேண்டிய பொறுப்பான பல அரச நிறுவனங்கள் முரண்பாடுகளையும், விரோதங்களையும் கட்டியெழுப்பும்செயற்பாடுகளை அதிகம் மேற்கொள்கின்றன.
இந்த நிறுவனங்களால் நாடு மீளவும் ஒரு பெரும் ஆபத்திற்குள் சென்றுவிடுமோ என்ற அச்சம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.