சிவனொளிபாதமலை பக்தர்கள் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்! இதற்கு தடை
சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில், நல்லதண்ணியிலிருந்து சிவனொளிபாத மலை உச்சி வரையிலான அனைத்து ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் விற்பனை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட செயலகம், அம்பகமுவ பிரதேச செயலகம், மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவு மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள், நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாலும், பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் பக்தர்களால் கொண்டு வர பட்டும் கழிவுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த மாதம் (09.11.2023) சப்ரகமுவ மாகாண பிரதம சங்கநாயக பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் நல்லதண்ணி கிராம சேவகர் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சிவனொளிபாத மலை பூமியின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் முறையான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், சிவனொளிபாத மலை கழிவு முகாமைத்துவத்திற்காக நுவரெலியா மாவட்ட செயலகம் 2 மில்லியன் ரூபாவை ஆண்டுதோறும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
கடந்த மாதத்தில் (19.07.2023) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் (இணைப்பு 1) "சிவனொளிபாத மலை பூமிக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி, நல்லதண்ணியிலிருந்து சிவனொளிபாத மலை உச்சி வரையிலான அனைத்து ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் விற்பனை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை மட்டுமே கொண்டு வர முடியும் மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், பொலித்தீன் போன்றவற்றை எடுத்துக் செல்லாதிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும் விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சாலை தடுப்புகளிலும் முழு சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு சிவனொளிபாத மலை பருவகாலம் தொடங்குவதற்கு சுமார் ஒரு வாரம் உள்ளதால், பக்தர்கள் தங்கள் தேவைக்கான பொருட்களை பொலித்தீன் பிளாஸ்டிக் இல்லாமல் முன் தயாரிப்பின் போது கொண்டு வர தயாராக இருப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.