திறைசேரி நிதி மோசடி ; 15 அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு
திறைசேரியால் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு செலுத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஹெக்கர் ஒருவரால் திருடப்பட்டுள்ளமை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஹெக்கர் நீண்ட காலமாக புதிதாக உருவாக்கப்பட்ட அரச கடன் முகாமைத்துவ காரியாலயத்தின் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாகத் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் மின்னஞ்சல் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலினூடாக அவர்கள் கொடுக்கல் வாங்கல் செய்யும் விதத்தை நீண்டகாலம் கண்காணித்து மிகவும் சூட்சுமமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு தரப்புகளுக்குமுரிய கணக்குகளுக்கு கடன் தவணைகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் 15 பேரிடம் தற்போது வரையில் குற்றவியல் திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டுள்ளது.
மேலும் தற்போது வரையில் குற்றவியல் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அநேகமாக இன்று (28) நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படலாமெனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.