ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்; பெரும் துயரம்!
ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமான செய்தி ஈழத்மிழர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் என ஈழத் தமிழ் பாடல் இலங்கை தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களிலும் பெரும் புகழ் பெற்ற பாடலாகும்.

தமிழகத்தின் திருநெல்லி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941, ஏப்ரல்,21, ல் பிறந்த தேனிசை செல்லப்பா , 85, அகவையில் இன்று 2026, ஏப்ரல்,28, ல் இயற்கை எய்தினார்.
ஈழத்தமிழர் மனங்களில் என்றும் அவர் நினைவுகள்...
குறித்த பாடலை தன் குரலால் விடுதலைப் போர் தொடுத்த பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா காலமானார். தேனிசை செல்லப்பா அவர்களின் பல பாசறைப்பாடல்கள் இன்றும் உலகம் எங்கும் ஒலித்துகொண்டிருக்கின்றது.
1990ஆம் ஆண்டு யாழ்கோட்டை மைதானத்தில் ஐந்து லட்சம் மக்கள் முன்னிலையில் அவரது கச்சேரி நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து எட்டு மாவட்டங்களில் மட்டக்களப்பிலும் அவரது கச்சேரி சிறப்பாக நடைபெற்றது
தேனிசை செல்லப்பா ஒரு பிரபலமான தமிழ் ஈழப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர், இவர் முக்கியமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்ட எழுச்சிப் பாடல்களை பாடியவராவார்.

அவர் மறைந்தாலும் ஈழத்தமிழர் மனங்களில் என்றும் அவர் நினைவுகள் அழியாது. இந்நிலையில் அவரது மறைவுக்கு மலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சிங்களர் கொடுமை மிஞ்சுதடா இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை...
ஈழவிடுதலை எழுச்சி, தமிழர் தாகம், வீரத்தின் வேர்கள் போன்ற பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இலங்கையில் 1964,அக்டோபர்,30 ல் மலையகமக்களை வெளியேற்றும் ஶ்ரீமாவோ சாஷ்த்திரி ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து ஐந்து லட்சம் மலையகத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.
அதற்காக ஏ.எல்.நாராயணனை வைத்து ஒரு பாடலை எழுதி செல்லப்பாவைப் பாடவைத்தார் ஆதித்தனார் அந்தப்பாடல்.
“செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை.. யாரும் துணைக்கிங்கே வரவில்லை ஆறுதல் வார்த்தைகள் தரவில்லை செந்தமிழா மனம் பொங்குதடா சிங்களர் கொடுமை மிஞ்சுதடா என பாடினார் தேனிசை செல்லப்பா அவர்கள்.