பிரதமர் பதவியை இவருக்கு வழங்கவேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பொதுஜன முன்னணியின் தினேஷ் குணவர்தனவிற்கு (Dinesh Gunawardena) பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பாஸ்குவல் (Anupa Pasqual) தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் கூட்டமைப்புடன் கூட்டணி வைத்துள்ள சஜித் பிரேமதாசவுடன், (Sajith Premadasa) இணைந்துள்ள டலஸ் அழகப்பெருமவை (Dullas Alahapperuma) என்னால் ஆதரிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
மேலும், இவர்கள் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது பொருத்தமற்றது என தெரிவித்த பெரமுன எம்பி, தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.