208 ஈரானிய பணியாளர்களை பத்திரமாக மீட்ட இலங்கை கடற்படை
ஈரானிய கப்பலில் உள்ள 208 பணியாளர்களிடமிருந்து இலங்கை கடற்படையினர் தொடர்பு கொண்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலில் நங்கூரமிடப்பட்ட நிலையில், பணியாளர்கள் முழுமையாக துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவர்களின் பாதுகாப்பும், துறைமுகத்தில் நடைமுறைகளையும் கடைபிடித்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னணி, கடந்த வாரங்களில் ஈரானிய கப்பல்கள் தொடர்பாக ஏற்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையது.

இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் கப்பலில் பணியாற்றிய அனைவரும் பத்திரமாக துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கப்பலின் உட்புறம், அதன் பணியாளர்கள் மற்றும் சரக்கு பற்றிய முழுமையான ஆய்வு நடவடிக்கைகள் துறைமுக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் மீண்டும் எந்தவொரு அபாயமும் ஏற்படாதவாறு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பல் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் முக்கிய பகுதி
கப்பல் திருகோணமலைக்கும், ஊழியர்கள் கொழும்பிற்கும் அழைத்து வர நடவடிக்கை கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக மையமாக விளங்குவதால், சர்ச்சைக்குரிய இந்த கப்பலை அங்கு நிறுத்தி வைப்பது கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை (Insurance rates) அதிகரிக்கவும் இது காரணமாகலாம்.
எனவே, குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கப்பலில் உள்ள 208 ஊழியர்களை பாதுகாப்பாக மீட்டு, எமது கடற்படையினரின் படகுகள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் விபரங்கள்:
மீட்கப்படவுள்ள 208 பேரில் பின்வருவோர் உள்ளடங்குகின்றனர்:
* 53 அதிகாரிகள்
* 84 கெடட் (Cadet) அதிகாரிகள்
* 48 சிரேஷ்ட கடற்படையினர்
* 23 கடற்படையினர்
கப்பலில் 300 குழந்தைகள் உள்ளார்கள் என்ற தகவல் பொய்யானதாகும் இந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைந்து கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினர் வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்படுவார்கள்.

