கொழும்பு அருகே இரண்டாவது ஈரானிய கப்பல் ; ஜனாதிபதி அநுரவின் அதிரடி முடிவு
இலங்கைக்கு அப்பால் பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டிருக்கும் இரண்டாவது ஈரானிய கப்பலின் தற்போதைய நிலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தகவல் தந்த அவர் இரண்டாவது கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு அனுமதிப்பதில்லை என்ற முடிவை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பதிலாக அந்த கப்பலை திருகோணமலைக்கு அழைத்து செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அந்த கப்பலில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொழும்பிற்கு அழைத்து வரும் பணி முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முன்னதாக குறித்த பொருளாதார வலயத்திலிருந்து காலி துறைமுகத்திற்கு செல்ல அனுமதி கோரியிருந்த ஈரானின் முதலாவது கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலால் தகர்க்கப்பட்ட நிலையிலேயே இந்த நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது.