கடலில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படை உதவி

Port of Colombo Sri Lanka Australia Sri Lanka Navy
By Sahana Sep 25, 2026 04:05 AM GMT
Report

அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் கடலில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மாமியாரை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வு ; 37 வயது இராணுவச் சிப்பாய் கைது

மாமியாரை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வு ; 37 வயது இராணுவச் சிப்பாய் கைது

பல தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர், குறித்த கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடலில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படை உதவி | Sri Lanka Navy Assists 25 Indonesian Fishermen

KM Garuda Jaya VI என்ற இந்தோனேசிய மீன்பிடி இழுவைப் படகு கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே கடற்பரப்பில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடம்பெற்ற நிலையில், படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக ஆரம்பத்தில் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, MV Moonstone என்ற வர்த்தகக் கப்பல் சம்பவ இடத்திற்குச் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 25 கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கை தொடர்பில் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (MRCC) தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, MRCC கொழும்பின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையின் இரண்டு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, MV Moonstone கப்பலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்களும் இலங்கை கடற்படை படகுகள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படையினரால் தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த 25 பேரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கை, கடலில் ஆபத்தில் சிக்கிய வெளிநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவியாக அமைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு முயற்சி ; 19, 22 வயது இளைஞர்கள் இருவர் கைது

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு முயற்சி ; 19, 22 வயது இளைஞர்கள் இருவர் கைது

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US