வேகமாக பரவிவரும் கொடிய தொற்று... சுகாதர அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!
குரங்கம்மை தொற்று நோய் குறித்து அவதானத்துடன் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியாவில் குரங்கம்மை அறிகுறியுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நபர்தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரது நோயின் தன்மை தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருவதால் குரங்கம்மை காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.