புதிய திரிபு குறித்து இலங்கை எச்சரிக்கையாக உள்ளது!
தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட புதிய திரிபு குறித்து இலங்கை சுகாதார திணைக்களத்தினர் எச்சரிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் திரிபு இதுவரை கண்டறியப்பட்ட திரிபுகளின் பிந்தைய பிறழ்வாக இருக்கலாம் என்றும், கொவிட் -19 தடுப்பூசிகளின் திறனைப் பாதிக்க வல்லதாக இருக்கலாம் என்றும் சுகாதார திணைக்களத்தினர் கருதுகின்றனர்.
இது குறித்து சுகாதாரத் திணைக்களம் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இந்த வகை திரிபு கண்டறியப்பட வில்லை. ஆனால், உலகளவில் வேகமாக பரவி வருவதால் அது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் உள்ளது. ஆய்வின்படி, தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு சி.1.2 ஆகும். இது மற்றைய திரிபுகளையும் விட அதிவேகமாகத் தொற்றக் கூடியது.
இந்நிலையில் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளின் திறனை தவிர்க்கவல்லதாக இருக்கலாம்.
அத்துடன் இந்தத் திரிபு - சி.1.2, டெல்டா திரிபை விட ஆபத்தானதா என்பதை
விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.