பாரிய ஆபத்தில் இலங்கை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். அதேவேளை நாட்டில் , பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றுநோய் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்தத் தளர்வைச் செய்துள்ளனரா? அல்லது யாரினுடையதாவது அழுத்தங்கள் காரணமாகக் இவற்றை செய்கின்றனரா? என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எது எவ்வாறு இருப்பினும் கொவிட் -19 தொற்றுநோய் எதிர்காலத்தில் நாட்டில் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவு அவர் மேலும் தெரிவித்தார்.