யாழிற்கு விஜயம் மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20-02-2022) யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
நல்லூர் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்ட அவர் பின்னர் ஆரியகுளம் நாகவிகாரைக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

அவருடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட மாநாடு இடம்பெறவிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்கள் பலரும் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.