இலத்திரனியல் பயண அனுமதி; வெளிநாட்டவர்களுக்கு புதிய வசதி !
இலங்கையில் இலத்திரனியல் பயண அனுமதி திட்டம் இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இலங்கை தனது சுற்றுலாத் துறையில் மீட்சியை எளிதாக்கும் முயற்சியில் இலத்திரனியல் பயண அனுமதி திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் 33 நாடுகளைச் சேர்ப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது