நுரை தள்ளும் காத்தான்குடி கடல்; சிறுவர்கள் கொண்டாட்டம்!
மட்டக்களப்பு காத்தான்குடி கடல் இன்று (07) காலை முதல் வெள்ளை நிற நுரையைத் தள்ளி வரும் நிலையில் சிறுவர்கள் அதனை கைய்லெடுத்து விளையாடுவதாக கூறப்படுகின்றது.
வடக்கில் அண்மையில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்த நிலையில் இப்போது காத்தான்குடி கடலிலும் நுரை அலைகளூடாக வெளியேறி வருகிறது.

பாரியளவில் நுரைகள்
சாதாரணமாக அலைகள் கரைக்கு வந்து செல்வது வழமை. ஆனால் தற்போது வருகின்ற அலைகளூடாக இவ்வாறு பாரியளவில் நுரைகள் தள்ளப்பட்டு கரையிலிருந்து அவைகள் காற்றினூடாக பறப்பதையும், அதிகளவிலான நுரைகள் கரையோரத்தில் தேங்கி இருப்பதையும் காணமுடிகின்றது.
பஞ்சு போன்ற மென்மையான குறித்த நுரைகளை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுவதுடன் காற்றினூடாக குறித்த நுரைகள் மேல்நோக்கி பறப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு அலைகளூடாக நுரைகள் வருவதில்லை. இதை வரலாற்றில் முதல் தடவையாக வருகிறது நாம் அறிந்தவரை பல நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு நுரை தள்ளியதாக அனுபவசாலிகள் சொல்லியதை நாம் கேட்டிருக்கிறோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.