இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளால் 400 மில்லியன் டொலர் வருமானம்
இலங்கைக்கு ஜனவரி மாதத்தில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாப் பயணிகளால் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் தெரிவிக்கின்றன.
அதேவேளை கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
இந்நிலையில், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மொத்தமாக 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இவ்வருடத்தில் பெப்ரவரி ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 485,102 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருமானமாக கிடைத்துள்ளது.
அதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த சுற்றுலா பயணிகளால் கிடைத்த வருமானமாக 3,168.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது என்றும் மத்திய வங்கியின் தரவு தெரிவிக்கின்றன.
மேலும் இது 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2,068.0 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்துடன் ஒப்பிடும் போது 53.2 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.