திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!
திருகோணமலை பொது மக்கள் அதிகளவில் பாவிக்கும் மக்ஹேய்சர் மைதானத்தில் திருகோணமலை பிக்கு ஒருவரின் தகனக் கிரியை இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் மக்ஹேய்சர் மைதானத்தில் இதை செய்ய வேண்டாமெனக் கூறியும் பிக்கு தகனக் கிரியை அடாத்தாக முன்னெடுக்கப்படுவதாக பிரதேசவாசிகள் சினம் வெளியிட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் கவலை
இந்த மன நிலை மிகவும் மோசமானது. இதை தட்டிக் கேட்க திருகோணமலையின் ஒரு அரச பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். ஆனால் அவரும் பெளத்த பேரினவாதத்திற்கு பயந்தே வாழ வேண்டி இருக்கின்றதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் தான் ஏனைய இடங்களில் விகாரைகள் வராமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்றும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் முடிவதற்குள் பிக்குவின் தகனக் கிரியை முன்னெடூக்கடுகின்றமை மக்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.