தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்
பிரபல தென்னிந்திய நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.
நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தீவிர ரசிகையான இவர், தவெக கொடியின் வண்ணங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த புடவையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகம்
இந்த புடவையில் யானை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்ட ரசிகர்கள், இது தவெக கொடியை பிரதிபலிப்பதாக கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். கல்யாணியின் இந்த 'தவெக' ஸ்டைல் லுக், விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தளபதியின் தவெக ரசிகை" என்ற வாசகத்துடன் அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அரசியல் களத்தில் தவெக கட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு முன்னணி நடிகை அக்கட்சியின் அடையாள வண்ணங்களில் உடை அணிந்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
கல்யாணி பிரியதர்ஷனின் இந்த வைரல் புகைப்படம், இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது.