நிதி நெருக்கடியால் தூதரகங்களை மூடும் இலங்கை!
நிதி நெருக்கடி காரணமாக செலவினங்களைக் குறைப்பதற்காக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி நைஜீரியாவில் உள்ள தூதரகத்தையும், பிராங்பேர்ட் மற்றும் சைப்ரஸில் உள்ள துணைத் தூதரகங்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் செலவீனங்களை குறைத்து அமெரிக்க டொலர்களை சேமிக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே இலங்கை தூதரகங்கள் மூடப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஜேர்மனில் பிராங்பேர்ட் துணைத் தூதரகம் மூடப்படுவதால், பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அதன் செயல்பாடுகள் மாற்றப்படும்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைத்து அமைச்சுக்களும் தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.