ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியை கைப்பற்றிய இலங்கை!
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்றையதினம் (14-02-2024) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 267 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக அதிகப்பட்சமாக பத்தும் நிசங்க 118 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக கைஸ் அகமது
2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.