பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவுறுத்தல்
அதிகரித்து வரும் குற்றச் செயல்களுக்கு எதிராக சட்டவிரோதமாக மக்களைக் கொல்வது ஒருபோதும் தீர்வாகாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி கடைபிடிக்கப்படும் போது குற்றங்களைக் இலகுவாக கட்டுப்படுத்த முடியும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற கொலைகள் மற்றும் காவலில் உள்ளவர்களின் இறப்புகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வழக்கறிஞர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.