சவூதி விமான நிலையங்கள் மீது தாக்குதல் ; இலங்கையின் எரிபொருள் விநியோகத்திற்கும் ஆபத்தா?
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் மற்றும் சவூதி அரேபியாவின் சிவில் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இலங்கையின் எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி இலங்கையின் எரிசக்தி விநியோகச் சங்கிலியையும் பாதிக்கக்கூடும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் விலைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்படும் தாமதங்கள் இலங்கையின் எரிபொருள் இறக்குமதியைப் பாதிக்கக்கூடும் என்றும், இதனால் விநியோகச் சவால்கள் உருவாகலாம் என்றும் அவர் விளக்கியிருந்தார்.
இலங்கை தனது எரிபொருள் தேவையின் ஒரு பகுதியை இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்து வருவதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பதும் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகளும் நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையில், தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சில, சர்வதேச விலைகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட நட்டங்களைக் காரணம் காட்டி விநியோகத்தைக் குறைத்துள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்......