இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த புதல்வரான சஞ்சய வனசிங்க, இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக இருந்தார்,
அதற்கு முன்னர் அவர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் 50 ஆவது கட்டளைத் தளபதியாக இருந்தார்.
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக பதவியேற்பதற்கு முன்னர் சஞ்சய வனசிங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக கடமையாற்றினார்.
மேலும், இவர் இலங்கை பீரங்கி படையணியின் கேணல் தளபதியாகவும் உள்ளார்.
அவரது தந்தை, ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க 1988-1991 வரை இராணுவத்தின் 11 வது தளபதியாக பதவியில் இருந்தார், பின்னர் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் 4 நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்படத்தக்கது.