இரத்தினபுரி மக்களுக்கு பொலிஸார் வெளியிட்ட விசேட அறிவித்தல்!
இரத்தினபுரியில் நாளையதினம் (13-12-2024) ஏற்படக்கூடும் போக்குவரத்து இடையூறு தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 14-12-2024ஆம் திகதி சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகவுள்ளதால், பெல்மடுல்ல கல்பொத்தாவல விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை, புனித கலசம் மற்றும் தெய்வ ஆபரணங்களை இன்றையதினம் (12ஆம் திகதி) பொதுமக்கள் வழிபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நாளை கலப்போத்தாவல ரஜமஹா விகாரையில் இருந்து இரத்தினபுரி பலாபத்தல வீதியில் மற்றும் குருவிட்ட எரத்ன வீதியில் இருந்து சிவனொளிபாதமலை உச்சி ஊர்வலமாக வரை எடுத்துவரப்படவுள்ளது.
இதன் காரணமாக ஏ-04 பிரதான வீதியில் பெல்மடுல்லயில் இருந்து இரத்தினபுரி புதிய நகரம் வரையில் நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து இடையூறு தொடர்பில் கவனம் செலுத்துமாறு சாரதிகளுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.