நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பு!
இலங்கையில் எதிர்வரும் நம்பவர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் குறித்து சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனிக்கிழமை (28-09-2024) செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 ஜனாதிபதித் தேர்தலின்போது கிடைத்த அனுபவம், பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் தொடர்பில் சனிக்கிழமை விசேட பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.