தீபாவளியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தினத்தில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விசேட விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த விசேட விடுமுறையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினருக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.