சபாநாயகரின் கல்வித் தகுதி விரைவில் வெளிவரும்
சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பில் சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு சபாநாயகரின் முறையான அறிக்கையின் பின்னர் பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் சபாநாயகர் எதிர்வரும் சில தினங்களில் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உண்மைகளை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சபாநாயகர் அசோக ரன்வல போலிக் கல்வித் தகுதியை கொண்டுள்ளதாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் அது தொடர்பில் பல அரசியல்வாதிகளும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.