இலங்கை வந்த இந்தியர்கள் அதிரடி கைது
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற இரண்டு இந்தியப் பிரஜைகள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தாய்லாந்தில் இருந்து FD 142 என்ற விமானம் மூலம் வருகை தந்திருந்தனர். இவர்களது கைப்பைகளில் இருந்து சுமார் 3 கிலோகிராம் 'குஷ்' கஞ்சா மற்றும் 182 கிராம் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பொதிகள்
கைது செய்யப்பட்ட இருவரும் 26 மற்றும் 37 வயதுடையவர்கள்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 32 மில்லியன் ரூபா (3.2 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருள் பொதிகள் காவல்றையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.