அத்து மீறிய அர்ச்சுனா எம்பி; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்வகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் , இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த்து.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
அதற்கமைய அர்ச்சுனாவுக்கு எம்பிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாண பொ0லிஸார் தெரிவித்துள்ளனர்.