இந்திய துறைமுகங்களை பயன்படுத்துகின்றதா அமெரிக்கா? ஈரான் கப்பல் தாக்குதல் தொடர்பில் இந்தியா வெளியிட்ட தகவல்
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க கடற்படை, தங்களது துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசக ர்ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்திய கடற்படை தளங்களைப் பயன்படுத்துவதாகவும் தற்போதைய மோதல் சூழலில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆதாரமற்ற கருத்து
இந்தத் தகவலை பொய்யானது மற்றும் முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளைப் பொதுமக்கள் நம்பக் கூடாது என எச்சரித்துள்ளது.
அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்படும் ஈரான் கடற்படை வீரர்கள் ; 02ம் உலகப்போரின் பின் முதல் முறை, அமெரிக்காவின் தகவல்
இந்தியாவில் நடைபெற்ற இராணுவப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பிய ஈரானியப் போர்க்கப்பல் மீது, இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது.