உலகையே உலுக்கிய விமான விபத்து... 179 பயணிகள் உயிரிழப்பு! வெளியான பகீர் காணொளி
தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு விமானம் வந்துகொண்டிருந்தது.
இதன்போது, முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கத்தின் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட சூழலில், அதில் பயணம் செய்த 179 பேரும் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
⚡️DRAMATIC moment South Korean plane with reported 180+ passengers becomes a fireball and crashes at airport CAUGHT on cam pic.twitter.com/VdrdavEXgT
— RT (@RT_com) December 29, 2024